வாழை இலையில் உணவு உட்கொள்வதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா…?

Published by
லீனா

வாழைஇலையில் நாம் உண்ணும் உணவு உட்கொள்வதன் மூலம் நமது உடலில் உள்ள பலவகையான நோய்கள் நீங்குவதோடு, நமது ஆரோக்கியமும் மேம்படுகிறது.

பொதுவாக விழாக்கள் திருமணங்கள் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் வாழையிலை பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த வாழை இலையை பயன்படுத்துவதால் நமது உடலுக்கு ஆரோக்கியம் ஏற்படும் என்பது பற்றி இதுவரை பலரும் அறியாமல் உள்ளனர். வாழைஇலையில் நாம் உண்ணும் உணவு உட்கொள்வதன் மூலம் நமது உடலில் உள்ள பலவகையான நோய்கள் நீங்குவதோடு, நமது ஆரோக்கியமும் மேம்படுகிறது.

இன்றுபலரும் உணவை தவிர்ப்பதால் குடலில் அல்சர் அதாவது குடல் புண் ஏற்படுவதனால் வாயில் புண் ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கு வாழை இலையில் சாப்பிடும்போது வாய்ப்புண் குணமாகும். அதுபோலவே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு உணவை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் அதை வாழை இலையில் பார்சல் செய்தால் அந்த உணவு கெட்டுப் போகாமல் இருக்கும்.

தீக்காயம் ஏற்பட்டவர்கள் உடைக்கு பதிலாக வாழையிலை தான் பயன்படுத்தப்படுகிறது. தீக்காயம் ஏற்பட்ட பின் அவர்களை வாழை இலையின் மீது படுக்க வைப்பர். ஏனென்றால், வாழையிலையில் சூட்டின் தாக்கத்தை குறைக்கும் தன்மை அதிகமாக உள்ளது.

பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் படுக்கவைத்து, காலையில் சூரிய ஒளியில் காட்டினால், சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும். மேலும் காயம், தோல் புண்களுக்கு ஏற்படும் போது தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து, புண்மேல் தடவி, வாழை இலையை மேலே கட்டு கட்டி வைத்தால் புண்கள் விரைவில் குணமாகும்.

Published by
லீனா

Recent Posts

“திருப்பதியில் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட வேண்டும்” – பவன் கல்யாண்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…

52 minutes ago

பள்ளி குழந்தை பலியான சம்பவம் – 3 பேருக்கும் ஜாமின்!

சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…

58 minutes ago

மீண்டும், மீண்டுமா? உ.பி-க்கு ரூ.31 ஆயிரம் கோடி! தமிழ்நாட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே!

சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…

2 hours ago

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…

3 hours ago

வைகுண்ட ஏகாதசி 2025-“கோவிந்தா” முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்..!

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…

3 hours ago

காட்டு பன்றிகள் வேட்டைக்கு அனுமதி! விளக்கம் கொடுத்த அமைச்சர் பொன்முடி!

சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…

3 hours ago