கைதட்டுவதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? வாங்க பார்க்கலாம்!

Default Image

கைதட்டுவதால் ஏற்படும் நன்மைகள்.

பொதுவாக நாம் ஒருவரை பாராட்டுவதற்காக தான் கைகளை தட்டுவது உண்டு. ஆனால், கை தட்டுவதால் நமது உடலுக்கு பல ஆரோக்கியத்தை ஏற்படுத்தக்கூடிய வலிகள் உள்ளது. தற்போது இந்த பதிவில் கைதட்டுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம்.

நம் கைகளில் 39 அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன. கைகளைத் தட்டும்போது ஏற்படும் உராய்வினால் வெப்பம் ஏற்பட்டு, உள்ளங்கையில் இருக்கும் ரிசப்டார்கள் தூண்டப்படுகின்றன. இதனால் தான், ‘சுஜோக்’ சிகிச்சை முறையில் கிளாப்பிங் தெரப்பியைப் பயன்படுத்துகிறார்கள்.

குறிப்பாக, கைப் பள்ளதாக்குப் புள்ளி, கட்டைவிரல் அடிப்புள்ளி , மணிக்கட்டுப்புள்ளி, கட்டை விரல் நகப்புள்ளி ஆகிய முக்கியமான புள்ளிகள்தூண்டப்படுவதால் தான் நமக்கு பல பயன்கள் கிடைக்கிறது.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் அரை மணி நேரம் கை தட்டுவதால் இந்த பிரச்னையில் இருந்து விடுபடலாம். மேலும், தலைவலி, இன்சோம்னியா எனும் உறக்கமின்மைப் பிரச்சனை, கண் பிரச்சனை போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

நினைவாற்றல்

கைதட்டும் பழக்கம் அதிகமாக உள்ளவர்களுக்கு ஞாபகசக்தி அதிகமாக காணபப்டும். அடிக்கடி கைகளை தட்டும் போது, நினைவாற்றலை மேம்படுத்துவதுடன், கவனிக்கும் திறனையும் அதிகரிக்கிறது.

மூளை

நாம் அடிக்கடி கைகளை தட்டுவதால், நமது மூளை சுறுசுறுப்பாகவும், உற்சாகத்துடனும் இயங்குவதுடன், மூளையின் நியூரோடிரான்ஸ்மீட்டர்கள் தூண்டப்பட்டு, செரட்டோனின் சுரப்பையும் தூண்டுகிறது.

மனநிலை

மனநிலை குழப்பமாக உள்ள சூழலில், நாம் கைகளை அடிக்கடி தட்டும் போது, நமது மனநிலையை ஒருமுகப்படுத்தி, சோர்வை நீக்கி உற்சாகப்படுத்துகிறது.

இரத்த ஓட்டம்

நாம் கைகளை அடிக்கடி தட்டும் போது, நமது உடலில் இரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கி, நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்