அடடே சுண்டைக்காயில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா….?
நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும், உடலுக்கு ஊட்டச்சத்தை அளித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
சுண்டைக்காயில் புரதசத்து, கால்சியம், இரும்புச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. நோயற்ற வாழ்க்கைக்கு ஆண்டி – ஆக்சிடெண்ட்ஸ் அவசியமான ஒன்று. வைட்டமின் ஏ, சி, இ போன்ற சத்துக்கள் சுண்டைக்காயில் அதிகமாக உள்ளது. மேலும் சுண்டைக்காய் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான வைட்டமின் சி-யை அதிகமாக கொண்டுள்ளது.
காய்ச்சல் :
காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. மேலும் ஆறாத காயங்களையும் ஆற வைக்க கூடிய ஆற்றல் கொண்டது. சுண்டைக்காயை உணவில் சேர்ப்பதன் மூலம் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. குறிப்பாக செரிமான சக்தியை தூண்டுகிறது.
நச்சு கிருமி :
கிருமிகளை அளிப்பதில் சுண்டைக்காய்க்கு நிகர் எதுவும் இல்லை என்றே கூறலாம். உணவின் மூலம் நம் உடலுக்குள் சேர்கிற கிருமிகள் அமைதியாக உள்ளே பலவித பாதிப்புகளை உருவாக்கலாம். ஆனால் அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுபவர்களுக்கு இந்த நச்சு கிருமிகள் உடலில் தங்குவது தவிர்க்கப்படுகிறது.
இரத்த அழுத்தம் :
சுண்டைக்காய் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, ரத்த குழாய்களில் படியும் கொழுப்பை கரைக்கும் சக்தி உடையது. வெள்ளை இரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. சுண்டைக்காயில் உள்ள இரும்பு சத்தானது ரத்த சோகையை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.