அட இவ்வளவு நன்மைகள் உள்ளதா…? உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சௌ சௌ காய்…!

Published by
லீனா

சௌசௌ காயில் உள்ள மருத்துவக் குணங்கள்.

உங்கள் வீடுகளில் தினமும் சமையலின் போது ஏதாவது ஒரு காய்கறி சேர்த்து சமைத்து சாப்பிடுவது உண்டு. அந்தவகையில், சௌசௌ காயை பொறுத்தவரையில் இதனை, கூட்டாகவும், சாம்பாருக்கும் நமது வீடுகளில் பெண்கள் பயன்படுத்துவதுண்டு.

இந்த காயில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. இது ஒரு கொடி வகையைச் சேர்ந்தது. இதில் புரதம், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகமாக காணப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது இந்த பதிவில் இதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது, எந்த ஒரு நோயாக இருந்தாலும், நம்மை எளிதில் தாக்கி விடும். எனவே இந்த காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நமது உடலில் நோயை எதிர்க்கக்கூடிய ஆற்றலை அதிகரிக்கிறது.

நரம்புத்தளர்ச்சி

நமது உணவில் அடிக்கடி சௌசௌ காயை சேர்த்து வந்தால் உடலில் ஏற்படும் தளர்ச்சியை போக்கி தசைகளை வலுவாக்கி, நரம்புத்தளர்ச்சி போன்ற பாதிப்புகளை சரி செய்யும் ஆற்றல் இதற்கு உள்ளது.

வயிற்றுப் பிரச்சனை

இந்த காய் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் வயிற்றில் உள்ள நச்சுக்களை நீக்கி, செரிமானத்தை சீராக்குகிறது. மேலும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளையும் போக்குகிறது.

கர்ப்பிணிப் பெண்கள்

பெண்களின், கர்ப்ப காலங்களில் அவர்களது கை, கால்களில் நீர் கோர்த்து வீக்கம் ஏற்படுவது உண்டு. இந்த வீக்கங்களை சரிசெய்ய, சௌசௌ காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், வீக்கங்கள் நீங்கி விடும். மேலும் கருவையும். தாயையும் தொற்று நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.

புற்றுநோய்

இன்று உயிர்க்கொல்லி நோயாக திகழக்கூடிய புற்றுநோயை பிரச்சினையை தடுப்பதில் சௌசௌ காய் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் வேதிப்பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய கிருமிகள் உடலில்  உள்ளே விடாமல் தடுத்து உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.

Published by
லீனா

Recent Posts

அமரன் முடிஞ்சது..”கூலி ஷூட்டிங் போறேன்”!உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் மீது வைத்து இருக்கும் அன்பைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு வரை…

3 mins ago

“விஜய் பேச்சை கண்டும் காணாமல் போயிருக்கலாம், ஆனால்.?” திருமாவளவன் விளக்கம்.!

சென்னை : மது ஒழிப்பு மாநாட்டின் போது, விசிக - அதிமுக கூட்டணி பேச்சுக்கள் , ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…

6 mins ago

கிடுகிடுவென மீண்டும் உயர்ந்த தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதோ!!

சென்னை :  தங்கம் விலை நேற்று நகை பிரியர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக சற்று குறைந்தது. அதாவது, தீபாவளி பண்டிகையை…

47 mins ago

சென்னை மெரினாவில் குவிந்த வடமாநிலத்தவர்கள் : இது அவுங்க ஊர் ‘பொங்கல்’ திருவிழா!

சென்னை : தமிழ்நாட்டில் விவசாயம் செழிக்க பேருதவி புரியும் சூரியனை வணங்கும் விதமாக பொங்கல் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 14இல்…

1 hour ago

“தைரியமான மனிதர் டொனால்ட் டிரம்ப்”…புகழ்ந்து பேசி வாழ்த்து தெரிவித்த ரஷ்ய அதிபர் புடின்!

மாஸ்கோ : அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மேற்பட்ட மாகாணங்களில் வெற்றி பெற்று…

1 hour ago

திருச்சி நூலக பணிகள் முதல் …ஜோ பைடன் வாழ்த்து வரை..!

சென்னை : திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை கலைஞர் பெயரால் அமைப்பதற்கான பணிகள் இன்று…

1 hour ago