முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கிறதா? 1 ஸ்பூன் ஓட்ஸ் போதும்..!
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க எளிமையான வழியை இன்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்: ஓட்ஸ்-1 ஸ்பூன்(அரைத்தது), தக்காளி சாறு-2 டேபிள்ஸ்பூன், கேரட் சாறு- 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: நன்கு அரைத்த ஓட்ஸ் உடன் தக்காளி சாறு, கேரட் சாறு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். முகத்தில் இதனை அப்ளை செய்வதற்கு முன் முகத்தை நன்கு கழுவி கொள்ளுங்கள். பின்னர் இந்த கலவையை முகத்தில் தடவி சற்று மசாஜ் செய்யவும். பின்னர் அதனை காயவிட்டுவிடுகள். காய்ந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். முகத்தில் நிச்சயம் மாற்றம் தெரியும். முகம் நன்கு பொலிவாக இருக்கும். இதனை வாரம் ஒரு முறை செய்து வருவதன் மூலம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் தெளிவாக இருக்கும்.