முகப்பருவால் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் இருந்தால் இந்த ஒரு பேஸ்ட்டை செய்து பயன்படுத்தி வாருங்கள்.
தற்போது உள்ள காலத்தில் இளம் வயதிலேயே முகத்தில் பருக்கள் வருகிறது. அதனை தெரியாமல் கிள்ளி விடுவதால் அதன் தழும்பு மறையாமல் கருப்பு திட்டாக இருக்கும். இது போல் இருக்கும் கரும்புள்ளிகளை எளிமையாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நீக்க முடியும். இந்த பேஸ்ட் செய்வதற்கு தேவையான பொருட்கள் வெந்தயம்-2 ஸ்பூன், அரிசி மாவு-1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள்-1/2 ஸ்பூன், வைட்டமின் இ ஆயில்-2 ஸ்பூன், ஆலோவேரா ஜெல்-2 ஸ்பூன்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெந்தயப்பொடியை சேர்த்து அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். இதில் அரிசி மாவு, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இந்த கலவை கெட்டியானதும் இறக்கி, ஆற வைத்து விடுங்கள். பின்னர் இதனை வடிகட்டியால் வடிகட்டி விடுங்கள். இந்த கலவையில் விட்டமின் இ ஆயில் மற்றும் ஆலோவேரா ஜெல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த பேஸ்டை முகத்தில் கண்களை தவிர்த்து தடவி கொள்ளுங்கள். இந்த மாஸ்க் காய்ந்ததும் கழுவி கொள்ளலாம். இது போன்று தினமும் செய்து வந்தால் கரும்புள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். நீங்கள் செய்ய கூடிய அந்த பேஸ்டை பிரிட்ஜ்-இல் வைத்து சேமித்து கொள்ளலாம்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…