விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் மோகன்தாஸ் படத்தில் ஸ்டண்ட் கலைஞர்களான அன்பறிவ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் காடன், எப்.ஐ.ஆர், ஜெகஜ்ஜால கில்லாடி மற்றும் மோகன்தாஸ் ஆகிய 4 படங்களை தனது கைவசம் வைத்துள்ளார் .இதில் காடன் மற்றும் எப்.ஐ.ஆர் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது.அதிலும் ராணாவுடன் விஷ்ணு விஷால் நடித்துள்ள காடன் திரைப்படம் மார்ச் 26-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்கவிருக்கும் மோகன்தாஸ் படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளதாக சமீபத்தில் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.விஷ்ணு விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் மோகன்தாஸ் படத்தினை முரளி கார்த்திக் இயக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ள ஷரவந்தி சாய்நாத், இந்திரஜித் சுகுமாரன் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.
கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றதும் ,அதில் சைக்கோ கொலைகாரராக விஷ்ணு விஷால் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ள மோகன்தாஸ் படத்தில்
பிரபல ஸ்டண்ட் கலைஞர்களான அன்பறிவ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவர்கள் கேஜிஎஃப் உட்பட பல படங்களுக்கு ஸ்டண்ட் கலைஞர்களாக பணியாற்றி உள்ளதும் , சமீபத்தில் இவர்கள் தளபதி 65 படத்தில் பணியாற்ற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…