பெட்ரோல்,டீசல் விலை உயரப் போகிறதா? – இன்றைய நிலவரம் என்ன?..!
126-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
இந்நிலையில்,சென்னையில் கடந்த 2 மாதங்களும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து வரும் நிலையில்,பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்படாமல் உள்ளது என வாகன ஓட்டிகள் ஏற்கனவே கவலைக் கொண்டுள்ளனர்.
இதனிடையே,உக்ரைன் ரஷ்ய போர் காரணமாக இந்தியா வாங்கும் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 139 டாலராக அதிகரித்துள்ளது. 2012 ஆம் ஆண்டிற்குப் பின் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.மேலும்,கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
அதே சமயம், இந்தியாவில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில்,அதன் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது. தேர்தல் காரணமாக இதுவரை உயர்த்தப்படாத பெட்ரோல்,டீசல் விலை தேர்தல் ரிசல்டுக்கு பிறகு கடுமையாக உயரலாம் என கூறப்படுகிறது.