இயற்கை வரம் கற்றாழையில் இவ்வளவு தீமைகளா? அறிவோம் வாருங்கள்!
உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கவும், முகத்தை பளபளப்பாக்கவும் தோல் பராமரிப்புக்கும், கூந்தலுக்கும், ரத்தசோகை நீக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என பல நன்மைகள் கொண்ட இயற்கை வரம் ஆகிய கற்றாழையை குறித்து அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சாதாரணமாக தீக்காயம் பட்ட காயங்களை குணப்படுத்த கூடிய சக்தி கற்றாழையில் உள்ளது. இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க பயன்படுத்தக்கூடிய இந்த கற்றாழை அதிகப்படியாக பயன்படுத்தப்படும் பொழுது நமது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
கற்றாழையின் ஆபத்துகள்
இந்தக் காற்றாழையில் லேடெக் எனும் பொருள் இருப்பதால் இது சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்துவதுடன் வயிற்றுவலி வயிற்று எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இது உடலில் உள்ள பொட்டாசியம் அளவை சில சமயங்களில் கூட்டியும் சில சமயங்களில் குறைக்கவும் செய்கிறது. மேலும் ஒவ்வாமை நோய் உள்ளவர்கள் இதை பயன்படுத்தும் பொழுது தோல் ஒவ்வாமை ஏற்படும். சிவப்பு கண்கள் மற்றும் தோல் வெடிப்புகள் ஏற்படுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க நாம் இந்த கற்றாழையை உட்கொள்வது வழக்கம். ஆனால் இதை அதிகமாக உட்கொள்ளும் பொழுது கற்றாழையில் உள்ள மலமிளக்கி தன்மை இதை சாப்பிடக் கூடிய நீரிழிவு நோயாளிகளுக்கு எலக்ட்ரோலைட் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தி இரத்தத்தின் சக்கரை அளவை ஒரேடியாக குறைத்துவிடும்.
கல்லீரலில் இது பிரச்சினையை ஏற்படுத்தக் கூடும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை இன்றி பயன்படுத்த வேண்டாம். மேலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் பொழுது தோல் சுருக்கங்களை ஏற்படுத்தும், தாய்ப்பால் கொடுக்கக் கூடிய பெண்கள் சுத்தமாக பயன்படுத்தாமல் இருக்கலாம். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பிரசவ பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும். மேலும் ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளை ஏற்படுத்தி, பலவீனம் மற்றும் சோர்வு ஏற்படுத்துகிறது. எதுவாக இருந்தாலும் அளவுக்கு மீறும் பொழுது அது நஞ்சு தான். எனவே கற்றாழையை மருத்துவ ஆலோசனையுடன் நோயாளிகளும், அளவுடன் நோயற்றவர்களும் பயன்படுத்துவது நல்லது.