காற்றில் பரவும் கொரோனா.? தடுப்பதற்கு இதுதான் சிறந்த வழி.!
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் தலைமுடி, இருமல், தும்மலிலிருந்து கொரோனா வைரஸ் காற்றில் பரவி அருகில் இருப்பவர்களின் நாசி துவாரம் வழியாக எளிதில் மனிதர்களின் மூச்சுக்குழலில் ஆழமாக சென்றுவிடுகிறது. என தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் காற்றில் பரவுமா என பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனை பற்றி நோபல் பரிசு பெற்ற மரியோ ஜே.மோலினா உள்ளிட்ட விஞ்ஞானிகள் அடங்கிய குழு மூன்று குழுக்களாக வுகான் நகர் சீனா, வாஷிங்க்டன் நகரம் அமெரிக்கா, இத்தாலி ஆகிய இடங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
காற்றில் பரவும் கொரோனா : அந்த ஆய்வில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது காற்றில் கொரோனா வைரஸ் பரவும். அதாவது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் தலைமுடி, இருமல், தும்மலிலிருந்து கொரோனா வைரஸ் காற்றில் பரவி அருகில் இருப்பவர்களின் நாசி துவாரம் வழியாக எளிதில் மனிதர்களின் மூச்சுக்குழலில் ஆழமாக சென்றுவிடுகிறது. என தகவல் வெளியாகியுள்ளது.
அறிகுறிகள் இல்லாத கொரோனா : பலருக்கு அறிகுறிகள் தெரியாமலே கொரோனா இருந்தததால் அது மற்றவர்களுக்கு தெரியாமலே எளிதில் காற்றின் மூலம் பரவிவிடும் சூழல் உண்டாகிவிடுகிறது எனஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
முகக்கவசத்தின் அவசியம் : இதனை கட்டுப்படுத்த சிறந்த வழி அனைவரும் கட்டாய முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுமே ஆகும். அவ்வாறு கட்டாய முகக்கவசம் என்கிற நிலை ஏற்படுத்தப்ட்ட பிறகு, ஏப்ரல் 6 முதல் மே 9 வரையில் இத்தாலியில் 78,000 க்கும் அதிக நபர் என்கிற அளவிலும், நியூயார்க் நகரில் ஏப்ரல் 17 முதல் மே 9 வரை 66,000 க்கும் அதிக நபர் என்கிற அளவிலும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
கொரோனாவை கட்டுப்படுத்த முககவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பது மட்டுமே சிறந்த வழி இல்லையென்றாலும், கொரோனாவில் இருந்து தப்பிக்க முகக்கவசமும், சமூக இடைவெளியும் சிறந்த வழி எனவும் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.