மிளகாயிலும் இவ்வளவு மருத்துவ குணங்களா? வாருங்கள் பார்ப்போம்!

Default Image

தென்னிந்திய உணவுகளில் மிளகாய் இல்லாத ஒரு காரசாரமான உணவு நிச்சயமாக இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு தென்னிந்திய உணவுகளில் ஆதாரமாக அமைந்து விட்டது இந்த மிளகாய். பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், குண்டு மிளகாய் குடைமிளகாய் என பல வகைகள் உள்ளன. இந்த மிளகாயில் உள்ள பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி இன்று பார்க்கலாம்.

மிளகாயின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்

இந்த தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின், கரோட்டினாய்டுகள் ஃப்ளேவோனாய்டுகள் ஆகியவை எளிதில் ஆவியாகும் எண்ணெய் ஸ்டீராய்டுகள் கேப்சைசின் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன உள்ள இந்த மிளகாய் ஜீரணத்தை ஊக்குவித்து உடலுக்கு வலு கொடுக்கிறது. ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது.

கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. மருத்துவத்திலும் இந்த மிளகாய் பயன்படுகிறது. உடலுக்கு வெப்பத்தினை தரக்கூடிய இந்த மிளகாய் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து கை கால் ஆகிய பகுதிகளுக்கும் மற்ற மைய உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டத்தினை சரி செய்கிறது. கேப்சைசின் எனும் வேதிப்பொருள் இந்த தன்மைக்கு காரணமாகிறது.

தோல் வியாதியான சொரியாசிஸ், நியூரால்ஜியா ஆகியவற்றையும் தலைவலி மூட்டுவலி ஆகியவற்றையும் இந்த மிளகாய் போக்குவதற்கு சிறந்தது. ஜீரண சுரப்பிகள் தூண்டி ஜீரண மண்டல நோய்களையும் தொண்டை கரகரப்பு ஆகியவற்றையும் நீக்கி சுகம் அளிக்கிறது. 

மேடைப் பேச்சாளர்கள் பாடகர்களுக்கு கூட இது மிகவும் உதவக் கூடிய ஒன்று வலிகளை போக்க ததைலமாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. ஆக சமையலுக்கு ஒரு காரணத்துக்காக பயன்படுத்தப்படுகிறது என்று நாம் எண்ணிய இந்த மிளகாயில் இன்னும் எண்ணற்ற பல நன்மைகள் உள்ளது. உணவாக மட்டுமல்லாமல் இதே மருந்தாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்