ஒரு விக்கெட்டை பறித்து இரண்டு சாதனைகள் படைத்த ஆர்ச்சர்!

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா அணிகள் மோதியது . இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு செய்தது.
முதலில் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 221 ரன்கள் அடித்து 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் நேற்று நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் 1 விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தது உள்ளார்.
நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பின்ச் விக்கெட்டை பறித்ததன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் 16 விக்கெட்டை பதிவு செய்தார்.இதனால் நடப்பு உலக்கோப்பையில் அதிக விக்கெட்டை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
மேலும் இதுவரை நடந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட்டை வீழ்த்திய வீரர்களில் ஜோஃப்ரா ஆர்ச்சர் இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளார். ஜோஃப்ரா ஆர்ச்சர் இன்னும் ஒரு விக்கெட்டை பறித்தால் 17 விக்கெட்டை பறித்து முதல் இடத்தில் இருக்கும் இயன் போதம் சாதனையை முறியடித்து விடுவார்.
16 – இயன் போதம், 1992
16 – ஜோஃப்ரா ஆர்ச்சர், 2019
14 – ஆண்ட்ரூ பிளின்டாஃப், 2007
13 – விக் மார்க்ஸ், 1983
13 – எடி ஹெமிங்ஸ், 1987
12 – மார்க் வூட், 2019
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024