எம்ஜிஆரின் 33வது நினைவு நாளையொட்டி எம்ஜிஆராக தலைவி படத்தில் நடித்த அரவிந்த்சாமி ட்வீட்டரில் புகைப்படத்தை வெளியிட்டு நன்றியை கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 33வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மேலும் எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு தலைவி படத்திலிருந்து சில புகைப்படங்களை நடிகர் அரவிந்த்சாமி வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கும் இந்த படத்தில் எம்ஜிஆராக நடிகர் அரவிந்த்சாமியும் ஜெயலலிதாவதாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இந்த படத்துக்கான போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் கூட ஜெயலலிதாவின் நினைவு தினத்தை ஓட்டி ஜெயலலிதாவதாக கங்கனா ரனாவத் நடித்த புகைபடங்களை வெளியிட்டார்.
இந்த நிலையில் தற்போது அதனை தொடர்ந்து இன்று எம்ஜிஆரின்
நினைவு தினம் என்பதால் நடிகர் அரவிந்த்சாமி தனது ட்வீட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு மேல் “புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்தது ஒரு மரியாதை மட்டுமல்ல, ஒரு பெரிய பொறுப்பு. இயக்குனர் ஏ.எல்.விஜய் & தயாரிப்பாளர்களுக்கு நன்றி ” என்றும் பதிவிட்டுள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…