சூப்பர் ஸ்டார் நடித்துள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வைத்து பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ஷங்கர் என பலர் கலந்துகொண்டனர்.
அப்போது படத்தின் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பேசுகையில், ‘ படத்தில் வேலை பார்த்த தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி பெருமையாக குறிப்பிட்டார். அதிலும் குறிப்பாக படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் மிகவும் சிறப்பாக திரைப்படம் வரவேண்டும் என தேவையான காட்சிகளை கேட்டு வாங்கி படத்தொகுப்பை மேற்கொண்டார். எனவும், படத்தின் கலை இயக்குனர் சந்தானம் அவர்கள் நான் என்ன நினைத்தேனோ அதனை செட் போட்டு கொடுத்தார். எனவும் குறிப்பிட்டார்.
சண்டை காட்சி இயக்குனர்கள் அன்பறிவு மாஸ்டர்கள் சிறப்பாக சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளனர். அதிலும், குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பாக நடித்துள்ளார். டூப் ஏதுமில்லாமல் நன்றாக நடித்துள்ளார். 15 வருடங்களுக்கு முன்னதாக ரஜினி எப்படி இருந்தாரோ அப்படியேதான் இந்த படத்திலும் மிகச் சிறப்பாக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். என பெருமையாக பேசினார். அவரை தியேட்டரில் காண தேடி ஓடி அலைந்த காலம் மாறி தற்போது அவரை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன். இதனை என்னால் நம்பவே முடியவில்லை. என நெகிழ்ச்சியாக தனது உரையை பேசி முடித்தார்
கேப் டவுன் : மிகவும் நல்ல ஆட்டக்காரர் ஆனால் கோபம் தான் கொஞ்சம் அடிக்கடி வரும் என்கிற வகையில், தென்னாப்பிரிக்கா அதிரடி…
சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த…
சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை…
டெல்லி : சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான், மின்சார திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு உத்தரபிரதேச பவர்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…