கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது போர் தொடுத்தனர் . ஹமாஸ் அமைப்பினர் நடத்திய முதற்கட்ட தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1,400 பேர் உயிரிழந்தனர் என கூறப்பட்டது. அதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் பதில் தாக்குதலில் இதுவரை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் நிலநடுக்கம்! உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நாகரில் இஸ்ரேல் ராணுவத்தினர் தற்போது வரை தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என இரு தரப்பினரும் பிணை கைதிகளாக நூற்றுக்கணக்கானோரை பிடித்து வைத்துள்ளனர். அவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானர்களை விடுவிக்க கடந்த சில வாரத்திற்கு முன்னர் இரு தரப்பில் இருந்தும் ஒரு வாரம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.
அதனை அடுத்து மீண்டும் காசா நகர் மீது தாக்குதல் தொடங்கியது. மீண்டும் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காஸாவில் போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் தொடர்பாக காசா நகரத்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கடந்த 48 மணிநேரத்தில் 390 பேர் காசா நகரில் உயிரிழந்துள்ளார். 734 பேர் காயமடைந்தனர்.
இதுவரை காசா நகரில் பொதுமக்கள் , ஹமாஸ் அமைப்பினர் என 20,057 பேர் உயிரிழந்தனர் என்றும் அதில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் 53,320 பேர் போரில் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1 சதவீத பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தனர் என்றும், காசா நகரில் இருந்து 85 சதவீத மக்கள் வெளியேறி வேறு இடத்திற்கு சென்று விட்டனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…