தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்.! 48 மணிநேரத்தில் 390 பேர்.. மொத்தம் 20,000 பேர் உயிரிழப்பு.!

Israel Hamas war in Gaza City

கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது போர் தொடுத்தனர் . ஹமாஸ் அமைப்பினர் நடத்திய முதற்கட்ட தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1,400 பேர் உயிரிழந்தனர் என கூறப்பட்டது. அதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் பதில் தாக்குதலில் இதுவரை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் நிலநடுக்கம்! உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நாகரில் இஸ்ரேல் ராணுவத்தினர் தற்போது வரை தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.  இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என இரு தரப்பினரும் பிணை கைதிகளாக நூற்றுக்கணக்கானோரை பிடித்து வைத்துள்ளனர். அவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானர்களை விடுவிக்க கடந்த சில வாரத்திற்கு முன்னர் இரு தரப்பில் இருந்தும் ஒரு வாரம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.

அதனை அடுத்து மீண்டும் காசா நகர் மீது தாக்குதல் தொடங்கியது. மீண்டும் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காஸாவில் போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் தொடர்பாக காசா நகரத்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கடந்த 48 மணிநேரத்தில் 390 பேர் காசா நகரில் உயிரிழந்துள்ளார். 734 பேர் காயமடைந்தனர்.

இதுவரை காசா நகரில் பொதுமக்கள் , ஹமாஸ் அமைப்பினர் என 20,057 பேர் உயிரிழந்தனர் என்றும் அதில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் 53,320 பேர் போரில் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1 சதவீத பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தனர் என்றும், காசா நகரில் இருந்து 85 சதவீத மக்கள் வெளியேறி வேறு இடத்திற்கு சென்று விட்டனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்