ஓரினச்சேர்க்கையாளரை பிரதமராக நியமித்த பிரான்ஸ் அதிபர்..!

Published by
murugan

பிரான்ஸில் அடுத்த ஐந்து மாதங்களில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கிடையில் பிரான்ஸ்  பிரதமராக இருந்த  எலிசபெத் போர்ன் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவர் பிரதமராகி இரண்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை. அவர் கடந்த மே 2022 இல் பிரதமரானார்.அவர் பிரான்சின் இரண்டாவது பெண் பிரதமர் ஆவார்.

அதைதொடர்ந்து, புதிய பிரதமர் யார் என்பது தொடர்பான எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தநிலையில் பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக கேப்ரியல் அட்டல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரான்சின் இளம் பிரதமர் என்ற பெருமையை கேப்ரியல் அட்டல் பெற்றார். கேப்ரியல் அட்டல் பிரதமராக நியமிக்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  கேப்ரியல் அட்டல்  பிரான்ஸ் நாட்டின் கல்வித்துறை அமைச்சராவும், அரசின் செய்தி தொடர்பாளராகவும் இருந்தார்.

இப்போது அவருக்கு முன் உள்ள சவால் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் அதில் அவர் பிரான்ஸ் அரசாங்கத்தை வழிநடத்துவார். பிரான்ஸ் அரசாங்கத்தில் கேப்ரியல் அட்டல் வேகமாக உயர்ந்துள்ளார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிரான்ஸ் சுகாதார அமைச்சகத்தின் ஆலோசகராக இருந்தார். 34 வயதான  கேப்ரியல் அட்டல் தன்னை  ஓரினச்சேர்க்கையாளர் என அறிவித்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஓய்வூதியம் மற்றும் குடியுரிமை சட்டத்தில் அவர் கொண்டு வந்த அதிரடி மாற்றங்களால் அதிபர் இமானுவேல் மேக்ரான் மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்த நேரத்தில் கேப்ரியல் அட்டலை பிரதமராக நியமனம் செய்துள்ளதால் மக்கள் மத்தியில் தன் மீதுள்ள கோபம் குறையும் என நினைத்து இந்த நடவடிக்கையை இமானுவேல் மேக்ரான் எடுத்துள்ளார் என பலர் கூறுகின்றனர்.

இந்தியாவில் குடியரசு தலைவரை விட பிரதமருக்கு தான் அதிக அதிகாரம் உண்டு. ஆனால் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பிரதமரை விட அதிபருக்கு தான் அதிக அதிகாரம் உள்ளது.

Recent Posts

“ஈரோடு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்கள்” – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…

11 minutes ago

2ம் ஆண்டில் தவெக… கொள்கைத் தலைவர்களின் சிலையை திறந்து வைத்த விஜய்.!

சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை  பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…

2 hours ago

வரும் 7ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…

2 hours ago

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி.! சாதிக்குமா இந்தியா?

லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…

2 hours ago

“புதிய அரசியல் அதிகார பாதையை உருவாக்குவோம்” – தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது.  இந்நிலையில், 2ஆம்…

3 hours ago

ரோஹித் சர்மா சாதனையை நெருங்கிய ஹர்திக் பாண்டியா! அடுத்த போட்டியில் முறியடிப்பாரா?

புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…

17 hours ago