முதல் முறையாக அமெரிக்காவில் தமிழ் வம்சாவளி தலைமை நீதிபதியாக நியமனம்…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- அமெரிக்க அப்பீல் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக அமெரிக்க வாழ் தமிழரான ஸ்ரீ. சீனிவாசன் என்பவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
- தெற்கு ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவர் அமெரிக்க அப்பீல் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
அமெரிக்காவில் சுபரீம் கோர்ட் உள்ளது. இதற்கு அடுத்த நிலையில் கொலம்பியா சர்கியூட் அப்பீல் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக அமெரிக்க வாழ் தமிழரான ஸ்ரீ. சீனிவாசன் (52) என்பவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவரது தந்தை பத்பநாபன் சீனிவாசன்.
இவர் திருநெல்வேலி அருகில் உள்ள மேல திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்தவர். இவர் அமெரிக்காவில் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக இருந்தார். தாயார் சரோஜா அதே பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியையாக இருந்து உள்ளார்.
1960-களில் இவர்களது குடும்பம் அமெரிக்காவிற்கு குடியேறியது. ஸ்ரீ. சீனிவாசன் பிறந்தது சண்டிகார். பட்டம் படித்தது ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் பின்னர் அங்கேயே சட்டப்பட்டமும் பெற்று தொடர்ந்து எம்.பி.ஏ. பட்டமும் பெற்றார்.
ஸ்ரீ. சீனிவாசன் அமெரிக்க அப்பீல் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஹார்வி வில்கின்சன்னிடம் குமாஸ்தாவாக இருந்தவர். பின்னர் 2011-ம் ஆண்டு முதல் முதன்மை துணை அட்டார்னி ஜெனரல் பதவி வகித்தார். இந்நிலையில் தெற்கு ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவர் அமெரிக்க அப்பீல் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,
February 8, 2025![IND vs ENG 2nd ODI cricket match](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-vs-ENG-2nd-ODI-cricket-match.webp)
நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!
February 8, 2025![rohit sharma Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-Kevin-Pietersen.webp)
“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!
February 8, 2025![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-rohit-sharma-.webp)
டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
February 8, 2025![narendra modi HAPPY](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/narendra-modi-HAPPY-.webp)