இன்று முதல் விண்ணப்பிக்கலாம் நீட் தேர்விற்கு.! என்.டி.எ அறிவிப்பு..!
மருத்துவ படிப்பிற்காக (NEET) நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என என்.டி.எ அறிவித்துள்ளது.
நாட்டின் உள்ள அனைத்து மருத்தவ மற்றும் பல் மருத்தவ படிப்பிப்புகளுக்கு எய்ம்ஸ், ஜிம்பர், தனியார் மருத்துவ கல்லூரிகள், அரசு நடத்தும் மருத்துவ கல்லூரிகள், ஏஎப்எம்சி, இஎஸ்ஐசி என அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் நீட் நுழைவுத்தேர்வு தேர்ச்சி அவசியம். வெளிநாட்டிலிருந்து மருத்துவம் தொடர விரும்பும் அனைவருக்கும் நீட் 2020 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வெளிநாட்டில் மருத்துவம் படிக்க தேவையான சான்றுதல் பெற வேண்டும். இந்தியாவில் 12-ம் வகுப்பு முடித்த அனைவரும் நீட் தேர்விற்கு தகுதியுடையவர்.
2020-ம் ஆண்டு டிசம்பர் 31-க்கு முன்னதாக அவர்களின் வயது 17-லிருந்து 25-க்கு உள்ளதாக இருக்க வேண்டும். தேர்விற்கு இயற்பியல், வேதியியல்,உயிரியல் மற்றும் பயோ டெக்னாலஜீ போன்ற பாடங்களை கணிதத்துடன் அல்லது ஆங்கிலதுடன் படித்திருக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பக்கங்கள் அல்லது 2020-கான பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும். இதை குறித்து தகவல்களை http://ntaneet.nic.in-ல் தெரிந்து கொள்ளலாம்.
நீட் தேர்வுகளுக்கு http://ntaneet.nic.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 31-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்திற்கான கட்டணத்தை ஜனவரி 1-ம் வரை தேர்வு முகமை அவகாசம் அளித்திருக்கிறது. எம்பிபிஎஸ் மற்றும் பிடியஸ் மருத்துவ படிப்புக்கு அடுத்தாண்டு மே 3-ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெறவுள்ளது.
பொது பிரிவினருக்கு ரூ.1500, ஓபிசி மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ரூ.1400 விண்ணப்ப கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ் சி ,எஸ்டி மாற்றுத்திறனாளி, மற்றும் திருநங்கைகளுக்கு ரூ.800 விண்ணப்ப கட்டணம் ஆகும். விண்ணப்ப கட்டணம் செலுத்துபவர் ஜிஎஸ்டி -யை சேர்த்து செலுத்த வேண்டும். நீட் தேர்வுகளுக்கான முடிவுகளை அடுத்தாண்டு ஜூன் 4-ம் தேதிக்குள் வெளியிட தேர்வு குழு ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்க – NEET INFORMATION