78 வயதான வீழ்ச்சியடைந்த முதியவரை வீழ்ச்சி கண்டறியும் அம்சத்தின் வாயிலாக ஆப்பிள் நிறுவனம் கண்டுபிடித்து காப்பாற்றியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்க்கோ நகரில் முதியவர் ஒருவரின் உயிரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றியுள்ளது. அமெரிக்காவில் உள்ள 78 வயதான மைக் யாகர் என்பவர் கீழே விழுந்து மூக்கில் பலமாக அடிப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் ஆப்பிள் வாட்ச்சிற்கு பதிலளிக்காததால் உடனடியாக ஆப்பிள் வாட்ச் 911 என்ற அவசர எண்ணுக்கு அழைத்துள்ளது. சம்மர்பீல்டு தீயணைப்பு துறையால் இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதன் பிறகு, மைக் யாகர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். நான் இங்கு விழுந்து இருந்தது உங்களுக்கு எப்படி தெரியும்? என்று, இதற்கு அவர்கள் உங்க ஆப்பிள் வாட்ச் தெரிவித்தது என்று கூறியுள்ளனர். மேலும், இந்த ஆப்பிள் வாட்சின் எச்சரிக்கை செய்தி பதிவை குறித்து மைக் யாகாரின் மனைவி லோரி யாகர், நான் பேச்சில்லாமல் இருந்தேன். என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. நான் இன்னும் இரண்டு மணி நேரம் வீட்டிற்கு வரவில்லை என்றால், என்ன நடந்திருக்கும் என்று யாருக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.
மேலும், ஆப்பிள் வாட்சில் வீழ்ச்சியடைவதை கண்டறியும் திறன் உள்ளது. இது மிகவும் விலையுயர்ந்த பொருளாக இருந்தாலும், 65 வயதிற்கு மேம்பட்டவர்களுக்கு இது நல்லமதிப்புடையாக இருக்கும். ஏதாவது இந்த வயதில் செய்யவேண்டும் என்று நினைத்தால் இந்த கடிகாரத்தை பெறுங்கள்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…