ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ஒரே நாளில் 540 மில்லியன் டாலர் செலவிட்ட மக்கள்.. ஆப்பிள் வரலாற்றிலே இல்லாததாம்!
ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரில் இருந்து ஜனவரி 1 ஆம் தேதி மட்டும் 540 மில்லியன் டாலருக்கும் அதிகமாக (இந்திய மதிப்பில் 39,60,38,70,000-க்கு அதிகமாக) செலவிட்டதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
iOS பயனர்கள், தங்களுக்கு தேவையான ஆப்களை ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கி கொள்வார்கள். ஆனால் அதில் பல ஆப்ஸ், கட்டணம் செலுத்தி பதிவிறக்குமாறு கூறும். அப்படிப்பட்ட செயலிககளையும் மக்கள் கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்வார்கள். அந்தவகையில், 2021-ன் முதல் நாளிலே வாடிக்கையாளர்கள், 540 மில்லியன் டாலருக்கும் அதிகமாக (இந்திய மதிப்பில் 39,60,38,70,000-க்கு அதிகமாக) செலவிட்டதாக ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
2020 ஆம் கடைசி வாரம் வரை பயனர்கள் 1.8 பில்லியன் டாலர் வரை செலவழித்து ஆப் ஸ்டோரில் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், இதில் அதிகளவில் ஜூம், டிஸ்னி+, அமாங் அஸ் ஆகிய செயலிகளை பதிவிறக்கம் செய்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.