புதிய MacBook டிசைன்கள் ஹேக்.. 1-ம் தேதி வரை அவகாசம் கொடுத்த ஹக்கர்ஸ்! அதிர்ச்சியில் ஆப்பிள்!

Default Image

ஆப்பிள் மேக்புக்-ன் புதிய டிசைன்களை ரஷ்யாவை சேர்ந்த REvil என்ற ஹாக்கர்ஸ் குழு, ஹேக் செய்து, 50 மில்லியன் டாலர் ransom தொகையை கேட்டு மிரட்டி வருகிறது.

ஆப்பிள் நிறுவனம், நேற்று தனது “Spring Loaded” நிகழ்ச்சியில் தனது புதிய பொருட்களான ஐ-மேக், ஐ-பேட், ஐ-போன் 12 மற்றும் 12 மினியின் புதிய நிறங்கள், ஏர் டேக் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்தது. இதனைதொடர்ந்து மகிழ்ச்சியுடன் இருந்த ஆப்பிள் நிறுவனத்திற்க்கு திடீரென ஒரு அதிர்ச்சி செய்தி கிடைத்தது. அது என்னவென்றால், புதிய மேக்புக் டிசைன்களை ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர் கும்பல் ஹேக் செய்துள்ளனர்.

அதை நிரூபிக்கும் விதமாக அந்த டிசைனின் ஒரு பகுதியை டார்க்வெப்பில் லீக் செய்துள்ளது. REvil என்று பெயரிடப்பட்ட அந்த ஹேக்கிங் குழு, மேக்புக் மற்றும் இதர ஆப்பிள் தயாரிப்புகளின் உற்பத்தியாளர்களில் ஒருவர் மீது சைபர் தாக்குதல் நடத்தி, ஆப்பிள் மேக்புக் டிசைனை ஹேக் செய்துள்ளது. தைவானை தளமாகக் கொண்ட குவாண்டா என்ற நிறுவனத்தை முதலில் டார்கெட் (target) செய்துள்ளதாகவும், அந்நிறுவனம் பணம் தர மறுத்துள்ளதாக ப்ளூம்பெர்க்கின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த ஹாக்கர்ஸ் கும்பல், முதலில் குவாண்டா நிறுவனத்தை மிரட்டியது. அந்நிறுவனம் பணம் தர மறுத்த நிலையில், தற்பொழுது மிகப்பெரிய வாடிக்கையாளரான ஆப்பிள் நிறுவனத்தைய் பின்பற்ற முடிவு செய்தனர். இதுகுறித்த அறிக்கை, டார்க் வெப் போர்ட்டலில் வெளியிட்டுள்ளதாக The Record ஊடகம் தெரிவித்துள்ளது.

அந்த ஹேக்கர் கும்பல் 21 ஸ்கிரீன் ஷாட்களை வெளியிட்டுள்ளது. அதில் “This is the property of Apple and it must be returned,” அதாவது, இந்த டிசைன், ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமானது. அதனால் இதனை திருப்பித்தரப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்பிள் அல்லது குவாண்டா நிறுவனம், 50 மில்லியன் டாலர் ransom தொகையை மே 1-ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால், ஒவ்வொரு நாளும் புதிய டேட்டாவை வெளியிடுவதாக ஹேக்கிங் குழு மிரட்டியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் டிசைனை ஹேக் செய்துள்ளது, வல்லுனர்களிடையே அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்