அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நேற்று முதல் ரஷ்யாவில் அனைத்து தயாரிப்பு மற்றும் விற்பனையையும் நிறுத்தியுள்ளது.
உக்ரைனுக்கும் ,ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போர் இன்னும் ஓயவில்லை. ஒவ்வொரு நாளும் தாக்கல் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், உலகின் பல நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நேற்று முதல் ரஷ்யாவில் அனைத்து தயாரிப்பு மற்றும் விற்பனையையும் நிறுத்தியுள்ளது.
ஆப்பிள் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யாவில் எங்கள் விற்பனையை அனைத்தையும் நாங்கள் நிறுத்திவிட்டோம். இனி ரஷ்யாவில் உள்ள Apple App Store இல் இருந்து எதையும் பதிவிறக்கம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை கண்டித்து பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கவும் இந்த நாடுகள் உறுதியளித்துள்ளன.
ஐ.நா கூற்றுப்படி, உக்ரைனுக்கும், ரஷ்யாவிற்கும் இடையே நடந்து வரும் சண்டைகள் காரணமாக இதுவரை 500,000 க்கும் அதிகமான மக்களை நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 28 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் அவசர அமர்வில் பேசிய ஐநாவுக்கான ரஷ்யாவின் நிரந்தரப் பிரதிநிதி வசிலி நெபென்சியா, உக்ரைனை இணைக்கும் திட்டம் ரஷ்யாவிடம் இல்லை என்று கூறினார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…