சீன ஆப் ஸ்டோரில் ஒரே நாளில் 46,000 செயலிகள் நீக்கம்.. ஆப்பிள் நிறுவனம் அதிரடி!

Default Image

உரிய உரிமை பெறாத காரணத்தினால், சீன ஆப் ஸ்டோரில் இருந்து 39,000 கேம்ஸ் உட்பட 46,000 செயலிகளை ஆப்பிள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் சீன ஆப் ஸ்டோரில் சீனாவின் ஆப் ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து டெவலப்பர்கள் முறையான உரிமை பெறாத காரணமாக 46,000 செயலிகளை ஆப்பிள் தனது ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. மேலும், டெவலப்பர்கள் முறையான உரிமம் பெற ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே காலக்கெடு விதித்திருந்த நிலையில், தற்பொழுது நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நீக்கப்பட்ட 46,000 செயலிகளில் 39,000 செயலிகள் கேம்கள் ஆகும். அதுமட்டுமின்றி, இது ஆப்பிள் வரலாற்றில் ஒரே நாளில் அதிகளவு செயலிகள் நீக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. இதுகுறித்து கிமாய் ஆராய்ச்சி நிறுவனத்தின் கருத்துப்படி, தடைசெய்யப்பட்ட கேம்ஸில் Ubisoft-ன் NBA2K20 மற்றும் Assassin’s Creed Identity ஆகிய பிரபல கேம்கள் அடங்கும் எனவும், இதில் 1,500 கட்டணம் செலுத்தும் ஆப்களில் வரும் 74 ஆப்கள் மட்டுமே தப்பித்துள்ளது. அதற்கு காரணம், அது ஆப்பிள் நிறுவனத்தின் கோள்கைகளை ஒப்புக்கொண்டு அதன்படி செயல்படுவதே ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
Bihar jewelry store robbery
MK Stalin Annamalai
NTK Leader Seeman - TVK leader Vijay
DMK MP Kanimozhi
Virat Kohli
ind vs nz - jadeja