இந்தியாவில் கொரோனோ… ஆப்பிள் ஐபோன் விற்பனைக்கு எந்த பாதிப்பும் இல்லை என தகவல்…

Default Image

இந்தியாவில்  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக  மக்கள் வீடுகளுக்குள் முடங்க்கிவரும் நிலையில் ஆப்பிள் ஐபோன் விநியோகம் பாதிக்கப்படவில்லை  என தற்போது  தெரியவந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ஐபோன் விநியோகம் சீராக வளர்ச்சியடைந்து இருக்கிறது. மார்ச் மாத நிலவரத்தை ஆய்வு செய்தால் தான் கொரோனா வைரஸ் பாதிப்பின் தாக்கம் பற்றிய விவரங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விநியோகம் 17 சதவீதம் அதிகரித்தது இருந்தது.  ஐபோன் விநியோகத்திற்கு ஐபோன் 11 மற்றும் ஐபோன் XR ஆகிய மாடல்களே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தி, விலை குறைப்பு உள்ளிட்டவையின்  காரணமாக  நடப்பு 2020 ஜனவரி- பிப்ரவரி வாக்கில் இந்திய சந்தையில் அதிகம் விநியோகம் செய்யப்பட்ட மாடல்களில் ஆப்பிள் ஐபோன் 11 மற்றும் ஐபோன் XR உள்ளிட்டவை இருக்கின்றன. 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்