தளபதி விஜய்க்கு ஜோடியாகும் அபர்னா தாஸ்..??

நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும் இன்று சன் டிவி அலுவலகத்தில் இந்த படத்திற்கான பூஜை நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானதை தொடர்ந்து இன்று நடந்த தளபதி 65 பூஜையில் நடிகை அபர்னா தாஸ் கலந்துகொண்டார். இதனால் விஜய்க்கு ஜோடியாக அவர் தான் அந்த இரண்டாவது ஹீரோயின் என்று தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் படத்திலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே அவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் நடிகை அபர்னா தாஸ் மனோகரம், நான் பிரகாசன் என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே நடிகை பூஜா ஹெக்டே நடிப்பது முன்பே அறிவிக்கப்ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025