இந்திய சாலையில் சீறிப்பாயவுள்ள அப்பாச்சி RR 310!
டிவிஎஸ் நிறுவனம், தனது புதிய அப்பாச்சி RR 310 பிஎஸ் 6 அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த தலைமுறை டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பிஎஸ் 6 புதுப்பிக்கப்பட்ட என்ஜின் மட்டுமல்லாமல், புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளையும் கொண்டுள்ளது.
புதிய டிவிஎஸ் அப்பாச்சி RR 310, பிஎஸ் 6-இணக்கமான, 312.2 சிசி, எஸ்ஐ, 4-ஸ்ட்ரோக், 4-வால்வு, ஒற்றை சிலிண்டர், லிகுட்-குல்ட், ரிவர்ஸ் இன்கிலைன்டு என்ஜினாகும். அர்பன், ரெயின், ஸ்பார்ட் மற்றும் டிரக் (Urban, Rain, Sport and Track) என நான்கு சவாரி முறைகள் உள்ளன. இந்த பைக், அர்பன், ரெயின் முறைகளில் 25.8PS மற்றும் 25Nm டார்க் மற்றும் ஸ்பார்ட் மற்றும் ட்ரக் முறைகளில் 34PS மற்றும் 27.3Nm டார்க் பவரை உருவாக்குகிறது. இந்த என்ஜின், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 2020 டி.வி.எஸ் அப்பாச்சி RTR4V பிஎஸ் 6 மாடலை போலவே, புதிய அப்பாச்சி ஆர்ஆர் 310 பிஎஸ் 6 RT-fI (ரேஸ் டியூன்-பியூஎல் இன்ஜக்ஷன்) தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.
டிவிஎஸ் அப்பாச்சி RR310, 2 வினாடிகளில் 46.77 கிமீ வேகத்தை அடைகிறது. இது 2.93 வினாடிகளில் 0-60 கிமீ வேகத்தையும் 7.17 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தையும் அடையும். இந்த பைக், அர்பன் மற்றும் ரெயின் மோடுகளில் 125 கி.மீ வேகத்திலும், ஸ்போர்ட்ஸ் மற்றும் ட்ரக் மோடுகளில் உச்சகட்ட வேகமாக 160 கி.மீ வேகத்தை தொட முடியும்.
இந்த வண்டி, ட்ரெல்லிஸ் பிரம்ம வடிவமைப்பை பெறுகிறது. முன்பக்க சஸ்பென்ஷனை பொறுத்தளவில், அப்ஸைட் டவுன் போர்க் மற்றும் பின்புறத்தில் பிஸ்டன் வாயு உதவி மோனோஷாக் சஸ்பென்ஷன் மூலம் செய்யப்படுகின்றன. பிரேக்ஸை பொறுத்தளவில், 300 மிமீ முன்புறம் மற்றும் 240 மிமீ பின்புறத்தில் டூயல் சேனல் ஏபிஎஸுடன் கிடைக்கிறது.
வண்டியின் மாறுபாடுகளில் பெரிதளவில் மாற்றம் இல்லை. இரு-எல்இடி இரட்டை ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லைட்டுகள், 5 இன்ச் வெர்டிகள் டிஎஃப்டி (TFT) மல்டி-இன்ஃபர்மேஷன் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் புளூடூத்-இயக்கப்பட்ட ஸ்மார்ட்-எக்ஸ்-கனக்ட் (smart x connect) போன்ற அம்சங்களுடன் வருகிறது. இது ஆர்டி-ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் த்ரோட்டில்-பை-வயர் (Throttle by wire) தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.
இந்த வாகனம் ரேசிங் ரெட் மற்றும் டைட்டானியம் பிளாக் கலர் விருப்பங்களில் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்களில் கிடைக்கிறது. மேலும், இந்த வண்டியின் விலை, 2.40 லட்சம் (எஸ் ஷோரூம், டெல்லி) முதல் வரவுள்ளது என டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.