தமிழ் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா ஷெட்டி.!?

அனுஷ்கா ஷெட்டி இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை அனுஷ்கா ஷெட்டி கடைசியாக 2020-இல் வெளியான ‘சைலன்ஸ்’ படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த படம் குறித்து அறிவிப்பும் அனுஷ்கா வெளியிடவில்லை.
தற்போது, தமிழ் சினிமாவில் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது, அதாவது, அனுஷ்கா தனது அடுத்த இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. தகவலின்படி, இப்படம் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அனுஷ்கா ஷெட்டி ஏற்கனவே ‘தெய்வ திருமகள்’ படத்தில் ஏ.எல்.விஜய்யுடன் இணைந்து பணியாற்றியிருப்பதால், நடிகை மற்றும் இயக்குனரின் ஒத்துழைப்பு ரசிகர்களின் மனதில் நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஏ.எல்.விஜய் கடந்த 2007 ஆம் ஆண்டு அஜித் மற்றும் த்ரிஷா முக்கிய வேடங்களில் நடித்த ‘கிரீடம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘மதராசப்பட்டினம்’, ‘தெய்வத் திருமகள்’, ‘தலைவா’, ‘சைவம்’ போன்ற ஹிட்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025