அனுஷ்காவிற்கு வில்லியான 'பிக் பாஸ்' அபிராமி!? கெளதம் மேனனின் மாஸ்டர் பிளான்!
தமிழ்சினிமாவில் மாஸ் & கிளாஸ் இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் உருவான எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் உருவாகி ரிலீசாகாமல் இருந்து வந்தன.
தற்போது வேல்ஸ் நிறுவனம் முன்வந்து தனுஷ் நடிப்பில் உருவான எனை நோக்கி பாயும் தோட்டா படத்தினை வாங்கி வரும் 29ஆம் தேதி ரிலீஸ் என அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து வேல்ஸ் நிறுவனத்திற்கு மூன்று படங்களை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ளார்.
இதில் முதல் படமாக வருண் நாயகனாக நடித்து வரும் ஜோஸ்வா எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அடுத்து, அனுஷ்காவை வைத்து ஹீரோயின் மையம் கொண்ட ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் வில்லியாக நடிக்க வைக்க பிக் பாஸ் புகழ் அபிராமி வெங்கடாச்சலத்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம். இவர் ஏற்கனவே தல அஜித் நடித்து இருந்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.