விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தை பார்க்க மக்கள் திரையரங்கிற்கு வருவது போல் பாலிவுட்டிலும் ஒரு திரைப்படம் வரவேண்டும் என்று அனுராக் பாசு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் சினமா வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு படி படியாக கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்ததும் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. அதற்கு பிறகு விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படம் வெளியானது. இந்த படம் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகதஸ்தர்கள் போன்றோருக்கு சிறப்பான லாபத்தை கொடுத்த படமாக அமைந்தது. படத்தை ரசிகர்கள் மட்டும் பார்த்து பாராட்டாமல் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், கிரிக்கெட் வீரர்களும் பாராட்டி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது பாலிவுட் இயக்குனரான அனுராக் பாசு சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தை பார்க்க மக்கள் திரையரங்கிற்கு வருவது போல் பாலிவுட்டிலும் ஒரு திரைப்படம் வரவேண்டும். அப்போதுதான் இங்கும் மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள் என்று கூறியுள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…