இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் ராம் சரணுடன் இணைந்து மற்றொரு டாப் ஹீரோ நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் .இவர் பல ரீமேக் படங்களையும் இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார் . கடைசியாக இவர் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து இயக்கிய 2.0 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றது.தற்போது அவர் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பானது சில பல பிரச்சனைகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதனை குறித்த அப்டேட் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் சமீபத்தில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை அறிவித்திருந்தார்.ஷங்கர் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் ராம் சரண் நடிக்க உள்ளதாகவும் , ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.தமிழ் , தெலுங்கு,இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் மற்றொரு டாப் ஹீரோவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இந்த படத்தில் முதலில் பவன் கல்யாண் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க தேர்வு செய்திருந்ததாகவும் ,தற்போது அந்த வேடத்தில் மற்றொரு டாப் நடிகர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அந்த நடிகர் தெலுங்கு சினிமாவை சேர்ந்தவராக இருக்க வாய்ப்பில்லை எனவும் ,பிற மொழியை சார்ந்த டாப் ஹீரோ தான் ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தில் ராம் சரணுடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தகவல் உண்மையெனில் அந்த மற்றொரு டாப் ஹீரோ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…