சீனாவில் ஏற்பட்டுள்ள பயங்கரமான நிலநடுக்கம். கட்டிட இடிபாட்டில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு.
இன்று உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ், முதன்முதலாக சீனாவின் வுஹான் மாகாணத்தில் தான் முதலில் ஆரம்பமானது. இந்த வைரஸானது, அந்நாட்டு மக்களில் பல்லாயிரக்கணக்கானோரை பாதித்தது. மேலும் பலர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில், தற்போது தான் இந்த வைரசின் பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு, அந்நாட்டு மக்கள் மெது மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இதனையடுத்து, அந்த நாட்டை அடுத்ததாக அச்சுறுத்தும் விதத்தில், யுனான் மாகாணத்தில் கியாஜியா நகரை மையமாக கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. சீன புவியியல் ஆய்வு மையம், இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவித்ததுள்ளது.
யுனான் மாகாணத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட நகரங்களை இந்த நிலநடுக்கம் கடுமையாக உலுக்கிய நிலையில், ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. இந்த கட்டிட இடிபாட்டில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…