#Breaking:தாலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான்;இந்தியர்களை மீட்க ஆப்கன் செல்லும் விமானம்…!
ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று மதியம் மேலும் ஒரு விமானம் ஆப்கன் தலைநகர் காபூல் செல்கிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தொடர் தாக்குதலில் தாலிபான்கள் ஈடுபட்டு வந்தனர்.இதனையடுத்து,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை நேற்று தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தையம் கைப்பற்றினார்கள். தாலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து, முன்னாள் உள்துறை அமைச்சர் அலி அகமது ஜலாலி இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இதனையடுத்து,அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானில் இருந்து வெளியேறிய நிலையில்,ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக தாலிபான்கள் சிறிது நேரத்திற்கு முன்னர் அறிவித்துள்ளனர்.இதனால்,ஆட்சி பொறுப்பு தாலிபான்கள் வசம் வந்துள்ளது.இதனால்,பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள்,அதிகாரிகள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர்.
இந்நிலையில்,ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று மதியம் மேலும் ஒரு விமானம் காபூல் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே,ஒரு ஏர் இந்தியா விமானத்தில் 129 பேர் இந்தியா திரும்பியுள்ள நிலையில் மீண்டும் ஒரு விமானம் ஆப்கான் தலைநகர் காபூல் செல்கிறது.
Govt has told Air India to put two aircraft on standby for emergency evacuations from Kabul. Air India has prepared a set crew for emergency operations from Kabul to New Delhi: Govt Sources pic.twitter.com/b8TFQfojbg
— ANI (@ANI) August 16, 2021
இதற்கிடையில்,பிரிட்டன்,ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் ஆப்கானிஸ்தான் உடனான விமான சேவையை முற்றிலும் தடை செய்துள்ளனர்.