ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இருந்து இந்தியர்களுடன் மேலும் ஒரு விமானம் டெல்லி புறப்பட்டுள்ளது.
உக்ரைனை 7-வது நாளாக ரஷ்யா உக்கிரமாக தாக்கி வருகிறது. அந்த வகையில்,உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதியில் மிகப்பெரிய அளவில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே,உக்ரைனில் இருந்து வெளியேறி அதன் அண்டை நாடுகளான ருமேனியா,போலந்து,ஹங்கேரி வரும் இந்தியர்கள் ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு சிறப்பு விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.அதன்படி,60 % இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறி விட்டதாக இந்திய வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இருந்து இந்தியர்களுடன் மேலும் ஒரு விமானம் டெல்லிக்கு புறப்பட்டுள்ளது.
அதே சமயம்,உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஹிண்டன் விமான தளத்தில் இருந்து இரண்டு இந்திய விமானப்படை விமானங்கள் ருமேனியா மற்றும் ஹங்கேரிக்கு புறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய விஷயங்கள் இன்னும் சர்ச்சையில் உள்ளது. தொடர்ச்சியாக…
சென்னை : தமிழகத்தில் வரும் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக…
சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்ட 2-வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ்…
சென்னை: இன்று 76-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : வளர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் திலக் வர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற…
சென்னை : விஜயின் கடைசி திரைப்படமான அவருடைய 69-வது படத்தினை இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த…