நடிகர் சித்தார்த் மீது மேலும் ஒரு புகார் – நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு கடிதம்!

தனியார் தொலைக்காட்சி பெண் ஊழியரை இழிபடுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாக நடிகர் சித்தார்த் மீது புகார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியின் பெண் செய்தி வாசிப்பாளர் குறித்து தரக்குறைவாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டியிருந்ததாக நடிகர் சித்தார்த் மீது மேலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்து பதிவிட்ட நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய மகளிர் ஆணையம் தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
ஏற்கனவே, சாய்னா நேவாலை விமர்சித்து ட்வீட் பதிவிட்ட விவகாரத்தில் நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தேசிய மகளிர் ஆணையம் புகார் அளித்த நிலையில், மேலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, பஞ்சாப் சென்றிருந்த பிரதமர் மோடி பாதுகாப்பு குறைபாடு காரணமாக திரும்பியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு ஆதரவாக இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நோவால் கருத்து தெரிவித்திருந்தார். அதாவது, பஞ்சாப்பில் பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு நடிகர் சித்தார்த் அவரது ட்விட்டர் பக்கத்தில், இறகுப்பந்து உலகின் சாம்பியன், கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர் என்று தெரிவித்தார். இதில் இறகுப் பந்தின் ஆங்கில வார்த்தையான “ஷட்டல் கார்க்” என்பதை ”Subtle Cock” என்று குறிப்பிட்டிருந்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு.
சித்தார்த்தின் பதிவு சாய்னாவை இழிவுபடுத்துவதாக கண்டனம் எழுந்துள்ளது. அவருக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். சித்தார்த் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் மகாராஷ்டிர மாநில டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
“COCK & BULL”
That’s the reference. Reading otherwise is unfair and leading!
Nothing disrespectful was intended, said or insinuated. Period. ????????
— Siddharth (@Actor_Siddharth) January 10, 2022
இதனிடையே, விமர்சனத்திற்கு பதிலளித்த சித்தார்த், “நான் தரக்குறைவாக எதுவும் சொல்லவில்லை. “COCK & BULL” என்பதில் இருந்து தான் குறிப்பிட்டு அந்த கருத்தை பதிவிட்டேன். ஆபாசம் மற்றும் யாரையும் அவமரியாதை பதிவு செய்ய வேண்டும் என்கிற எந்தவொரு உள்நோக்கமும் எனக்கு இல்லை என்று விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.