அமெரிக்க அதிபர் தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிட உள்ளார்.
அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் கொரோனா வைரஸையும் பொருட்படுத்தாமல் அதிபர் ட்ரம்ப், ஜோ பிடன் இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஒரு ஆங்கில செய்தி நிறுவன ஒன்றுக்கு பேட்டி அளித்த ஒசாமா பின்லேடனின் மருமகள் 33 வயதான நூர் பின் லேடின் கூறுகையில், ஜோ பிடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் மற்றொரு 9/11 தாக்குதல் நடக்கக்கூடும் என்று கூறியுள்ளார்.ஆனால், டொனால்ட் டிரம்பால் மட்டுமே அதைத் தடுக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.
ஒபாமா, பைடன் ஆட்சியில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் பெருகினர். அவர்கள் ஐரோப்பாவிற்கு வர வழிவகுத்தது. ஆனால், பயங்கரவாதிகளை வேரோடு ஒழிப்பதில் டிரம்ப் முன்மாதிரியாக உள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டில் ஜனாதிபதி போட்டியிடுவதாக அறிவித்தபோதிலிருந்து ட்ரம்ப் ஆதரவாளராக நான் ஆனார் என்று கூறினார். “நான் தூரத்திலிருந்தே பார்த்தேன், இந்த மனிதனின் தீர்மானத்தை நான் பாராட்டுகிறேன், அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், என்று அவர் கூறினார். இது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளின் எதிர்காலத்திற்கும் இன்றியமையாதது என தெரிவித்தார்.
அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி பயங்கரவாதிகள் நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுர கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை நடத்திய ஒசாமா பின்லேடன் 10 ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானில் அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…
சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…
டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…