ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் தல 61 படத்திற்கான அறிவிப்பு…? வெளியான மாஸ் தகவல்..!
அஜித் 61 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வலிமை படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டருடன் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை படத்தில் நடித்துமுடித்துள்ளார். தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் 61 வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். அந்த படத்தையும் இயக்குனர் ஹெச்.வினோத் இயங்குவதாகவும், தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியானது. தற்போது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வலிமை படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டருடன் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.