பிரபுதேவாவின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு..!!

பிரபுதேவா இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
நடிகர் மற்றும் நடன இயக்குனரான பிரபுதேவா தற்போது இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பஹீரா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரபுதேவா இருட்டு அறையில், முரட்டு குத்து படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் நடிகை, ரைசா வில்சன், வரலட்சுமி சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
???? pic.twitter.com/FWpZmca59P
— Raiza Wilson (@raizawilson) July 15, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025