அண்ணாத்த திரைப்படம் தனது கடைசி படமாக இருக்க கூடாது என்று கூறி தனது நண்பர்களிடம் ரஜினிகாந்த் கண்கலங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் நடைபெற்றது.அப்போது படப்பிடிப்பில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அது மட்டுமின்றி அப்போது ரஜினிக்கு உடல்நல குறைவு ஏற்பட தற்போது ஓய்வெடுத்து வரும் ரஜினி இந்த மாதம் முதல் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் ரஜினிகாந்த் சமீபத்தில் அவரது சில நண்பர்களை சந்தித்து பேசியுள்ளார்.அப்போது அண்ணாத்த திரைப்படம் எனது கடைசி திரைப்படமாக இருந்து விட கூடாது என்றும் ,மேலும் நடிக்க விரும்புவதாகவும் கண்கலங்கி தெரிவித்துள்ளார்.அதனுடன் இனி முதல் தனது வயதிற்கேற்ப கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.இதுவரை ரஜினியை இப்படி ஒரு நிலைமையில் பார்த்ததில்லை என்று ரஜினியின் நண்பர்கள் வருத்தத்துடன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை தோண்டும் வேலை நடைபெற்று வந்தது. கடந்த சனிக்கிழமை காலையில், டோமலபெண்டா…
சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…
சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…
சென்னை : தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்களை' முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த…
கீவ் : உக்ரைனில் அமைதி திரும்ப தனது பதவியை விட்டுத்தர வேண்டும் என்றால் தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.…