அண்ணாத்த கடைசி திரைப்படமா இருந்திட கூடாது.! நண்பர்களிடம் கண்கலங்கிய படி கூறிய ரஜினி.!

Default Image

அண்ணாத்த திரைப்படம் தனது கடைசி படமாக இருக்க கூடாது என்று கூறி தனது நண்பர்களிடம் ரஜினிகாந்த் கண்கலங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் நடைபெற்றது.அப்போது படப்பிடிப்பில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அது மட்டுமின்றி அப்போது ரஜினிக்கு உடல்நல குறைவு ஏற்பட தற்போது ஓய்வெடுத்து வரும் ரஜினி இந்த மாதம் முதல் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் ரஜினிகாந்த் சமீபத்தில் அவரது சில நண்பர்களை சந்தித்து பேசியுள்ளார்.அப்போது அண்ணாத்த திரைப்படம் எனது கடைசி திரைப்படமாக இருந்து விட கூடாது என்றும் ,மேலும் நடிக்க விரும்புவதாகவும் கண்கலங்கி தெரிவித்துள்ளார்.‌அதனுடன் இனி முதல் தனது வயதிற்கேற்ப கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.இதுவரை ரஜினியை இப்படி ஒரு நிலைமையில் பார்த்ததில்லை என்று ரஜினியின் நண்பர்கள் வருத்தத்துடன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MudhalvarMarundhagam
INDvPAK 2025
Pakistan vs India 2025
Chief Minister Stalin - Ministry of External Affairs
India Vs Pakistan toss
dragon vs neek box office collection