அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய சவாலாக இருந்தது – பாலா..!!
அண்ணாத்த திரைப்படத்திற்காக சிறுத்தை சிவாவின் தம்பி மற்றும் நடிகருமான பாலா 15 கிலோ எடையை குறைத்துள்ளார்.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில், இன்றுடன் படப்பிடிப்பை முடித்துவிட்டு நாளை படக்குழுவினர் சென்னை திருப்புகிறார்கள். மேலும் மீதமுள்ள படப்பிடிப்பை 20 நாட்கள் கொல்கத்தாவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி மற்றும் நடிகருமான பாலா அண்ணாத்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதில் பாலா பேசியது ” நான் 50 க்கும் மேல் திரைப்படங்களில் நடித்துள்ளேன் ஆனால் எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு அண்ணாத்த படத்தில் நான் சவால்களை சந்தித்துள்ளேன். படத்திற்காக 15 கிலோ எடையை குறைத்துள்ளேன். நான் ரஜினி சாரின் மிகப்பெரிய ரசிகன். அவரை நேரில் மிகவும் சகஜமாக குறும்பாக இருப்பார். காமெடி உணர்வு அவரிடம் இயல்பாகவே உள்ளது” என்று கூறியுள்ளார்.