அண்ணாத்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் உணர்வுபூர்வமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு முடித்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ரஜினி படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு இயக்குனரிடம் இந்த படம் எல்லாரையும் உணர்வுபூர்வமாக இணைத்து விடும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும்” என்று ரஜினி கூறியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
இந்த திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகிறது. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…