ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
வீரம், வேதாளம், விவேகம் போன்ற ஹிட் படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. பின்னர் டிசம்பரில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போது, படப்பிடிப்பில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது காரணமாக நிறுத்தப்பட்டது. மேலும், ரஜினிக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. தற்போது உடல்நிலை சீராகி சென்னையில் ஓய்வில் இருக்கிறார்.
தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அரசியல் வரப்போவதில்லை என்றும் அறிவித்துவிட்டார் ரஜினி. இதனால், ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றும் எப்போது படம் வெளியாகும் எனவும் குழப்பம் நிலவி வந்த நிலையில், தற்போது அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி நவம்பர் 4 2021 அன்று வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டத்தில் நடிகை 'சன்னி லியோன்' பெயரில் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு மாதந்தோறும் பணம்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க நாளான இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ஒரே…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் குவைத் நாட்டின் அழைப்பை ஏற்று அங்கு 2 நாள் சுற்றுப்பயணம்…
வேலூர் : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய், கடந்த அக்டோபர் மாதம் தனது கட்சியின் முதல் மாநாட்டை…
சென்னை: கடலூர் மாவட்டம் கொத்தட்டையில் புதிய சுங்கச்சாவடி திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுங்க கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும், தனியார் பேருந்து…
சென்னை: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழந்து, நேற்றைய…