மாஸ்டர் திலீப் சுப்பராயன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அண்ணாத்த திரைப்படம் குறித்து கூறியுள்ளார்.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த மார்ச் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மேலும் தற்போது படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிவரும் மாஸ்டர் திலீப் சுப்பராயன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அண்ணாத்த திரைப்படம் குறித்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அண்ணாத்த திரைப்படம் மிகவும் அருமையாக இருக்கும். முதல் பகுதி படையப்பா போன்றும் இரண்டாவது பகுதி பாட்ஷா போன்று இருக்கும். இந்த படத்தில் ரஜினி சார் தான் ஸ்பெஷல். சண்டைக்காட்சியில் அவர் டூப் போடாமல் அவரே தான் நடித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…