நாடி நரம்பு முறுக்க.! அரங்கம் தெறிக்க வெளியானது அண்ணாத்த மோஷன் போஸ்டர்.!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடபட்டுள்ளது.
இயக்குனர் சிறுத்தை சிவா – நடிகர் ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11-மணிக்கு வெளியான நிலையில், தற்போது படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடபட்டுள்ளது. போஸ்டரில் ரஜினியின் கம்பீர குரலுடன் நாடி நரம்பு முறுக்க முறுக்க, ரத்தம் முழுக்க கொதிக்க கொதிக்க அரங்கம் தெறிக்க தெறிக்க தொடங்குது அங்காரா கூத்து என்ற வசனமும் ரஜினி புல்லட்டில் வருவது போல் காட்சி இடம்பெற்றுள்ளது.
#AnnaattheMotionPoster
Arangam mulukka therikka therikka!https://t.co/qgiTJtxDr5@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @prakashraaj @immancomposer @IamJagguBhai @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #AnnaattheDeepavali— Sun Pictures (@sunpictures) September 10, 2021
படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025