அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகிறது.
இந்நிலையில், இன்னும் படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகவில்லை என்பதால் ரஜினி ரசிகர்கள் எப்போது தான் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என காத்துள்ளனர். இதனையடுத்து, தற்போது ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், ஒரு தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், அண்ணாத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் நாளை மறுநாள் செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாத தொடக்க நாளான இன்று (மார்ச் 1) கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.…