திருவண்ணாமலை கார்த்திரை தீபத்திருவிழாவையொட்டி 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. திருவண்ணாமலை அண்ணாம்லையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது.முக்கிய நிகழ்வான மகாதீபம் இன்று ஏற்றப்படஉள்ளது.
அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு எல்லாம் பரணி தீபம் ஏற்றப்பட்டது.இந்த தீபமானது பஞ்ச பூதமும் நானே,நானே பஞ்ச பூதம் என்ற அடிப்படையில் ‘ஏகன் அநேகன்’ தத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் மூலவர் சன்னிதி முன்பு பரணி தீபம் ஏற்றப்படுகிறது.
இதன் பின்னர் பிரம்ம தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும் இதைத் தொடர்ந்து,தீப தரிசன மண்டபத்தில் சிறப்பு அலங்கரத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.அப்போது உலகுக்கு ஆண்-பெண் சமம் என்ற தத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக தானே அர்த்தனாநாரீஸ்வரர் – ஆக எழுந்தருளி காட்சியும் தருகிறார்.
தங்கக் கொடி மரம் முன்பு உள்ள அகண்டத்தில் தீபம் ஏற்ற 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.அய்யன் ஜோதி வடிவமாக காட்சி கொடுப்பதால், மகாதீபம் ஏற்றியதும் ,மூலவர் சன்னிதி மூடப்படும்.மகா தீப தரிசனத்தை 11 நாட்களுக்கு பக்தர்கள் கண்டு தரிசிக்கலாம்.
அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்ற 200 கிலோ மற்றும் 5 அடி உயரம் கொண்ட மகா தீப கொப்பரைக்கு நேற்று முன் தினம் பூஜை செய்யப்பட்டது. அதன் பின் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் பவுர்ணமிக்கு சுமார் 35 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…