வரலாற்றில் இன்று(03.1.2020)… தமிழக முன்னால் முதல்வர் அறிஞர் அண்ணா மறைந்த தினம் இன்று…
- இந்தியா குடியரசான பிறகு 1952 முதல் நடந்த தேர்தலில் ஆட்சி அமைத்த இந்திய தேசிய காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர் அறிஞர் அண்ணா ஆவர்.
- தமிழகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்ட அறிஞர் அண்ணா மறைந்த தினம் வரலாற்றில் இன்று.
பிறப்பு:-
அறிஞர் அண்ணா காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் 15ம் நாள், 1909ம் ஆண்டு, நடராசன் முதலியார் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர்; அண்ணாவின் பெற்றோர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். அண்ணா தம் அன்னை பங்காரு அம்மாவை சிறு வயதிலே இறந்துவிட்டதால்.
அவரது தந்தை நடராசன் – ராசாமணி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். அண்ணா பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்ட அண்ணாவின் குடும்ப வறுமை காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிமாக நிறுத்திக் கொண்டார். பின் தனது கல்விய்யை தொடர்ந்தார்.
கல்வி:-
- 1934 இல், இளங்கலைமானி மேதகைமை,
- அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார்.
- பின்பு பச்சைப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்.
- ஆசிரியப்பணியை இடைநிறுத்தி பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபட்டார்.
அரசியல் வாழ்வு:-
பின்னாளில் சர். பி.டி. தியாகராய செட்டி மற்றும் டி. எம். நாயர் தலைமையில் ஒரு கட்சி இன்று துவக்கப்பட்டது. இக்கட்சி பின்னர் தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் எனப் பெயரிடப்பட்டு பின் நீதிக்கட்சியாக பெயர்மாற்றம் கண்டது. இக்கட்சியே சென்னைமாகாணத்தில் சுயாட்சி முறையை பின்பற்றி 1937 இல் இந்திய தேசிய காங்கிரசால் தோற்கடிக்கப்படும்வரை ஆட்சியில் இடம்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் அண்ணாதுரை நீதிக்கட்சியில் பெரியாருடன் சேர்ந்தார். பெரியார் அப்பொழுது நீதிக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்.
பின் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக திராவிட முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். பின் 1967 இல் நடைபெற்றத் தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அவரது தலைமையில் 1967 மார்ச் 6ல் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார், மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை 1967 ஏப்ரல் 16 இல்தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். அமெரிக்கரல்லாத அண்ணாதுரை அவர்களுக்கு யேல் பல்கலைக்கழகம், சப் பெல்லோசிப் என்ற கவுரவ பேராசிரியர் விருது 1967-1968 இல் வழங்கப்பட்டது. அமெரிக்கரில்லாத ஒருவருக்கு வழங்கப்பட்டதும் இதுவே முதல் முறை
மறைவு:-
அண்ணாதுரை தமிழகத்தின் முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் இவருக்கு புற்றுநோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது பிப்ரவரி மாதம் 3ம் நாள், 1969ம் ஆண்டு அன்று இவ்வுலகை விட்டு மரணமடைந்தார். அவர்