ஏழரைச் சனியின் பிடித்த காலத்தில் திருமணம் செய்யலாமா? அல்லது திருமணம் தடைபடுமா? என்று பலரும் சந்தேகத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.பொதுவாகவே கிரகங்களில் சனி பகவான் நியாத்தின் படி கர்மபலன்களை வழங்குபவர் அதனால் அவரை நியாயக்காரன் என்கின்றனர்.சனிக்கும்- மனித வாழ்க்கையும் நெருங்கிய தொடர்வு உண்டு என்று தான் கூறவேண்டும்.
இந்நிலையில் ஒருவருடைய ராசியில் சனி பெயர்ச்சி ஆகிறார் அதுவும் ஏழரை என்றால் இங்கு பலருக்கு அச்சம் காரணம் அவர் எதிர்மறையான பலன்களை தருகிறார் என்ற தவறான மனநிலையை மாற்றிக்கொள்ளுங்கள்.நீங்கள் இதுவரை என்ன நன்மை-தீமை செய்தீர்களோ அதற்கான கர்மபலனை அளிப்பவர் தான் சனிஸ்வரன்.அவ்வாறு சனி கொடுக்கும் எந்த பலனையும் தடுக்கவோ அல்லது தடை செய்யவோ வேறு எந்த கிரகத்திற்கும் அதிகாரம் கிடையாது.
பொதுவாக ஏழரை சனி காலத்த்தில் தான் பலருக்கும் திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் போன்ற பல சுப விஷயங்கள் நடைபெறுகிறது.ஏன் பல வருடங்களாக தடைபட்ட திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கூட சனி பிடியில் இருக்கும்போது எந்த தடையும் இன்றி எளிமையாக தான் முடிவடைந்துள்ளது.
சனி பிடிப்பதால் இங்கு யாருக்கும் கெடுதல் கிடையாது அவர் மனித வாழ்க்கையின் அர்த்தத்தை அனுபவம் மூலம் படிப்பினை செய்கிறார்.ஆணாக இருந்தால் அவனுடைய கடமை என்ன,பொறுப்புகள் என்ன? என்று புரியவைக்கிறார்.பெண்ணாக இருந்தால் குடும்பத்தினரிடையே எவ்வாறு நடந்து கொள்வது,குழந்தையின் அவசியம் அவற்றை பராமாரிப்பது,அன்பு எந்தளவுக்கு அவசியம்,உத்யோகத்தின் அவசியம் போன்றவற்றை புரியவைக்கிறார்.இந்நிலையில் இவ்வாறு அனுபவ படிப்பினைகளை தான் பிடித்த காலத்தில் கற்பித்து விட்டு செல்வார்.இந்த காலக்கட்டத்தில் தான் உதவுபவர் யார்? ஒதுங்கி செல்பவர் யார் என்று காண்பித்து கொடுப்பார்.
இத்தகைய சனி பிடித்த காலத்தில் ஒரு சிலர் தங்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வரன் அமையாத போது திருமணம் தாமதமாகிறது அல்லது ஏழரைச் சனியால் தடைப்பட்டது என்று அதன் மேல் பழி போடுகிறார்கள். ஏழரைச் சனி வந்தால் திருமணத்தை நடத்தகூடாது என்று திருமணத்தைத் தள்ளிப் போடுட்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் பல வருடங்களாக திருமணமே வேண்டாம் என்று கூறி முரட்டு சிங்கிளாக இருந்தவர்களுக்குக் கூட, ஏழரைச் சனியின் ஆதிக்க காலத்தில் சட்டென்று திருமணம் நடைபெற்று விடும் இது தான் சனி பகவானின் மகத்துவம்.திருமணம் சம்பந்தமாக ஏழரைச் சனியின் காலத்தில் திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் ஆனது கைகூடி வரும். ஏழரைச் சனியால் திருமணம் தடைபடுவதில்லை என்கின்றது ஜோதிட சாஸ்திரம்.
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…