படிக்கமட்டிங்குதா? பிள்ளைகள் கவலைவேண்டாம்!கல்வியில் சிறக்க எளிய வழிபாடு
நம்முடைய குழந்தைகள் படிக்காமல் இருக்க காரணம் எதுவாக இருந்தாலும் அதை ஒரு நொடிப்பொழுதில் பொடியாக்கும் ஒரு சுலபமான வழிபாட்டின் மூலம் இதனை நீக்கிவிட முடியும்.அத்தகைய வழிபாடு என்ன என்றுதானே? இதோ இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
பிள்ளைகள் சுட்டித்தனம் கொண்டவர்கள் அதிகம் விளையாட்டில் ஆர்வம் கொள்வார்கள் அது தவறில்லை இளம் வயதில் விளையாட வேண்டும் ஆனால் படிக்கவும் வேண்டாமா? என்று சொல்வது காதில் கேட்கிறது கண்டிப்பாக கல்வி அவசியம் ஒருவருக்கு அவ்வாறு படிப்பில் கவனம் செலுத்தாத குழந்தைகள் அல்லது படிப்பில் மந்தம் அது என்ன பிரச்சனையாக இருந்தாலும் சரி அவற்றை எல்லாம் தடுத்து ஞானத்தை அளித்து தரும் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடுவதன் மூலம் குழந்தைகளுக்கான கல்வி தடையானது நீங்கும் பொய்யில்லை மெய் கண்ட உண்மை.பொதுவாக அவரை வணங்கினாலே எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் அதை நீக்கும் சக்தி மூலப்பொருள் விநாயகருக்கு உண்டு.
நம் வீட்டில் பூஜை அறையில் மரகத விநாயகர் இருந்தால் நல்லது அவ்வாறு இல்லையென்றால் பச்சை நிறத்தில் உள்ள இந்த மரகத விநாயகரை வாங்கி நம் வீட்டில் வைத்து கொள்ளவேண்டும்.மரகத விநாயகருக்கு திங்கள்கிழமைகளில் சுத்தமான மலை தேனால் அபிஷேகம் செய்ய வேண்டும்.சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தேனை ஒரு பாட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.அந்த தேனை தினமும் காலை நேரத்தில் துளசி இலையால் தேனை எடுத்து அதனை வில்வ இலையில் விட்டு நன்கு குலைத்து பின்னர் குழந்தையின் நாவில் தடவி விட வேண்டும்.
பொதுவாக மலை தேனிற்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் சக்தி உண்டு தற்போது சுவாமியின் மீது அதுவும் மரகத உருவத்தின் அபிஷேகம் செய்வதால் அதன் சக்தி அதிகளவு இருக்கும்.
மரகத விநாயகர் இல்லையென்றால் பரவயில்லை அருகில் எதாவது சிவன் திருத்தலம் இருந்தால் அங்கு சென்று தேன் வாங்கி கொடுத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்த அந்த தேனை மேற்கொண்டு கூறியது போல் குழ்ந்தைக்கு கொடுத்து வந்தால் நிச்சயம் கல்வியில் ஆர்வம் ஏற்படும்.படிப்பில் சிறந்து விளங்குவார்கள். உணர்வால் மட்டுமே அவனை அறிய முடியும்…அரோகரா!